தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 49 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.57 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவி பேராசிரியர்
மொத்த காலிப் பணியிடம் : 49
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.57,700 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 06.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-51
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.