தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள தொழில் பழகுனர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வருட காலத்திற்கு உட்பட்ட தொழிற்பழகுநர் பயிற்சியிடமாகும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், பணினி அறிவியல் உள்ளிட்டவற்றில் பொறியியல் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
குறிப்பாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியில் பி.இ, டிப்ளமோ படித்தவர்கள் ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் www.mhrdnats.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை அறிய www.boat-srp.com என்னும் இணைப்பில் சென்று பார்க்கவும்.


Click it and Unblock the Notifications












