தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குருப்-1 நேர்முகத்தேர்வுக்கு செல்வோருக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழ்நாடு சேவாபாரதி ஏற்பாடு செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு சேவாபாரதியின் பாரதி பயிலகத்தின் இயக்குநர் தன்ராஜ் உமாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சேவாபாரதியின் பாரதி பயிலகம் மற்றும் பி.எல்.ராஜ் ஐஏஎஸ் அகாடமி சார்பில், டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வுக்கு செல்ல உள்ள மாணவர்களுக்கு இலவச பயிற்சி

அளிக்கப்பட உள்ளது.இந்தப் பயிற்சியானது சென்னை அண்ணாநகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும். இதில், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் பங்கேற்று பயிற்சி அளிக்கவுள்ளனர்.
மேலும், நேர்முகத்தேர்வை பதற்றமின்றி தைரியமாக எதிர்கொள்வது குறித்து மனநல நிபுணரின் ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்த இலவச பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் [email protected] என்ற மின்னஞ்சலில் தங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 90032-42208 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












