தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்-01 (ST)
சம்பளம்: ரூ.15,700-50,000
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி(முன்னாள் படைவீரர்களுக்கு இக்கல்வித்தகுதி வலியுறுத்தப்படாது). மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கல்வி, வயது, சாதிச்சான்று மற்றும் முன்னாள் ராணுவத்தினராக இருக்கும் பட்சத்தில் உரிய சான்றிதழ் போன்றவைகளின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயலாளர்,
சட்டமன்றப் பேரவைச் செயலகம்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600009
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 20-06-2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












