இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர், போஸ்ட்மேன், எம்டிஎஸ் உள்ளிட்ட 231 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த முழு விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 231
பணி : Postal Assistant/Sorting Assistant - 89
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
பணி : போஸ்ட்மேன் - 65
ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்
வயது வரம்பு : 31.12.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : Multi Tasking Staff (MTS) - 77
வயது வரம்பு : 31.12.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.18,500 முதல் ரூ.56,900 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:-
The Assistant Director (Recruitment), 0/o the Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai-600002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.12.2019 தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiapost.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.