தமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் (Junior Reporter) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : தமிழக காவல் துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Junior Reporter
மொத்த காலிப் பணியிடங்கள் : 29
கல்வித் தகுதி : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : தமிழக காவல் துறையில் இந்த இளநிலை ரிப்போர்ட்டர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpolice.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் சுயசான்றொப்பம் செய்த நகல்கள் மற்றும் அதனுடன் ஒப்புதல் அட்டையை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd Floor, Old Coastal Security, Group Building,DGP Office Complex,Mylapore, Chennai-4.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் தட்டச்சு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி : 31.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpolice.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












