தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பொதுசார்நிலை - முத்திரை கொல்லர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயணடையலாம்.

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
(பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் 32 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியோர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.)
காலிப் பணியிடங்கள் : 16
சம்பளம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.09.2018
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :-
மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்களிலும், தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகங்களில் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது, வயது உச்சவரம்பு, கல்வித்தகுதி மாற்றப்பட்டதால், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தவிர, மற்ற தகுதியானவர்கள் செப்டம்பர் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
- கூடுதல் தொழில் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாக முதல் தளம், எல்லீஸ் நகர், மதுரை - 625016
மேலும் விபரங்களை அறிய http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/09/Tamilnadu-Labour-Department-Recruitment-2018-16-Stamping-Smith-Posts.jpg என்னும் லிங்க்கை கிளிச் செய்து விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் தகுதிகளை அறிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றுகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பித்தில் ஒட்டியும், 2 புகைப்படங்களைத் தனியாகவும் இணைத்து பிற சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் செப்டம்பர் 26ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












