போட்டோகிராபியில் ஆர்வமா? உடனே விண்ணப்பியுங்கள்... தமிழக அரசில் போட்டோகிராபர் வேலை!

Posted By: Kani

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் காலியாக உள்ள இளநிலைப் புகைப்படக்காரர் பணியிடங்களை நிரப்ப அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: இளநிலை புகைப்படக்காரர்

சம்பளம்: ரூ.20,000-63,600

மொத்த பணியிடம்: 06

இன சுழற்சி முறை:
1.பிற்படுத்தப்பட்டோர்( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர முன்னுரிமையற்றவர்)
2. ஆதி-திராவிடர்( முன்னுரிமை பெற்றவர்)
3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் (முன்னுரிமை பெற்றவர்)
4. பொதுப்போட்டி( முன்னுரிமையற்றவர்)
5. பிற்படுத்தப்பட்டோர்(பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர முன்னுரிமையற்றவர்)
6.பொதுப்போட்டி(முன்னுரிமையற்றவர்)

பணியமர்த்தப்படும் இடம்: செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கீழ் உள்ள அலுவலகங்கள்.

தகுதி: பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பு பெற்று ஸ்டில் போட்டோ கிராபி, போட்டோ ஷாப், கோரல்-ரா போன்ற மென்பொருள்களில் பணிபுரிந்த அனுபவம் விரும்பந்தக்கது.

வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் நபர் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விபரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு 25-05-2018 மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புதுறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், சென்னை-600009

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 25-05-2018

English summary
Tamilnadu Information and Public Relations Department Recruitment 2018 06 Junior Photographer Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia