சாகர் மித்ராவில் இணைய விருப்பம்?

ஆழியை ரசிக்காதவர்கள் யாரும் உண்டோ...! ஆழி சார்ந்து, நாட்டில் பல வர்த்தகங்கள் நடந்து வருகின்றன. அதில், மீன் வளம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

நாட்டில் மீன்வளத் துறையில் ஒருமித்த கவனம் செலுத்தி, நீடித்த வளர்ச்சி காண, 'பிரதான் மத்ஸ்ய சம்பட யோஜ்னா' என்ற முன்னோடி திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து, செயல்படுத்த தொடங்கியுள்ளது.

சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு?

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் கடலோர மீன்பிடி கிராமங்களில், 'சாகர் மித்ரா' பணிக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசின் மீன்பிடி மற்றும் மீன்வர் நலன் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய கடமை இருக்குங்க...!

மீன் உற்பத்தியை, 2024-25க்குள் 220 லட்சம் டன்களாக அதிகரிக்கும் நோக்கில், 'பிரதான் மத்ஸ்ய சம்பட யோஜ்னா' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

 

உள்ளூர் மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது; அரசுக்கும், உள்ளூர் மீனவர்களுக்கு இடையே தொடர்பு பாலமாக செயல்படுவது; மீன் வளர்ப்பு விவசாயிகள் அமைப்புகளை உருவாக்க முனைவது; வானிலை எச்சரிக்கை, இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை, 'சாகர் மித்ரா'வின் முக்கிய பணி மற்றும் கடமையாகும்.

இத்திட்டத்தின் கீழ், 433 சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 433 சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாகம்: மீன்பிடி மற்றும் மீனவர்நலன் துறை

மேலாண்மை: தமிழக அரசு

காலியிடங்கள்: 433

கல்வி தகுதி

மீன்வள அறிவியல்/கடல் உயிரியல்/விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில், பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய பாடப்பிரிவில் விண்ணப்பங்கள் நிரப்ப முடியாத சூழலில், வேதியியல் / தாவரவியல்/ உயிர் வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் பாடப்பிரிவில், விண்ணப்பதாரர்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுவர்.

கனவிலும் மறக்காதீங்க...!

முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். பணி காலம் ஓராண்டு ஆகும்.

யாருக்கு முன்னுரிமை

மீன்பிடி பகுதிக்குட்பட்ட தாலுகாவில் உள்ள உள்ளூர் மீன்பிடி கிராமங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம்

செயல்திறன் மதிப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

விண்ணப்பிக்கும் நடைமுறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின், அந்தந்த கடலோர மாவட்ட உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பபங்கள் 22.08.2022க்குள் வந்து சேர வேண்டும்.

கடலோர மாவட்ட உதவி இயக்குனர்களின் முகவரி, தொலைபேசி எண், விண்ணப்ப படிவம், கடலோர மீன்படி கிராமங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை ஒரு முறை படித்து பாருங்களேன் மறக்காம...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that under Pradhan Mantri's Matsya Sampada Yojana, 433 Sagar Mitra jobs can be applied for in the coastal fishing villages of Tamil Nadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X