நோ எக்ஸாம்... ரூ.1.50 லட்சம் ஊதியம் ..!

தமிழ்நாடு வன அனுபவக் கழகம் என்பது நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் இணைக்கப்பட்ட மாநில அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம், 2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையில் செயல்பட்டு வரும் இதன் அலுவலகம், நிலையான மற்றும் அனுபவமிக்க சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும், சூழல் சுற்றுலா வளர்ச்சியின் நோக்கத்துக்காகவும் செயல்பட்டு வருகிறது.

நிர்வாகம் : தமிழ்நாடு வன அனுபவக் கழகம்

மேலாண்மை : மாநில அரசு

வன அனுபவக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்பு..!

பணி விவரம்

Ø தலைமை ஆபரேட்டிங் அதிகாரி (Chief Operating Officer)

Ø கம்பெனி செக்ரட்டரி (Company Secretary)

Ø பைனான்ஸ் ஆபிசர் (Finance Officer)

Ø அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிசர்(Administrative Officer)

Ø அசோசியேட் ( Associate (Technical)

Ø அசோசியேட் (Associate (Finance)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.12.2023

கல்வி தகுதி:

Ø தலைமை ஆபரேட்டிங் அதிகாரி:

இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். மேனேஜ்மென்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், டூரிசம் ஆகியவற்றில் முதுகலை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாத ஊதியம் ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்.

Ø கம்பெனி செக்ரட்டரி:

இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சி.எஸ்., (இந்திய கம்பெனி செக்ரட்டி நிறுவனத்தின் உறுப்பினர்) தகுதியுடன் இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் ஊதியம் கிடைக்கும்.

Ø பைனான்ஸ் ஆபிசர்:

இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சி.ஏ., சி.டபிள்.யூ.ஏ., படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் .

Ø அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிசர்:

இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்.பி.ஏ., மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.

Ø அசோசியேட் (டெக்னிக்கல்):

இப்பணிக்கு ஒருவரும், அசோசியேட் (பைனான்ஸ்) பணிக்கு ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அசோசியேட் (டெக்னிக்கல்) பணிக்கு டூரிசம் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி, எஃகோ டூரிசம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சயின்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

அசோசியேட் (பைனான்ஸ்) பணிக்கு பி.பி.ஏ., மற்றும் பைனான்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.12.2023

தேர்வு முறை:

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை என்பதை மறக்காதீங்க... நேர்காணலில் பங்கேற்று ஈஸியா பணி நியமன ஆணையை வாங்குங்க யூத்ஸ்...!

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://tnwec.com/ இணையதளம் சென்று Career என்பதை கிளிக் செய்து, டிசம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோரில் தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் பணியில் அமர்த்தப்படுவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்பதவிக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

பொது விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டு உள்ளன.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://tnwec.com/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Forest Experience Kazhagam, Chennai has published a notification to fill various vacancies in Kaliyaka. A monthly salary of Rs.30 thousand to Rs.1.50 lakh has been fixed for the selected candidates for these posts which are appointed without examination. The last date to apply for these posts is 25th December.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+