தமிழக அரசின் கீழ் தேனி அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேனி அரசு பஞ்சாயத்து அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கிராம உதவியாளர்
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மேலும், அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.11,100 முதல் ரூ.35,100 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 28.10.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிப்பட்டி (விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது "கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021") என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.10.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












