தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் பி.எட். சிறப்புக் கல்வி பயில ஆசையா...!!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த படிப்பில் சேர்வதற்கு வரும் ஜனவரி 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் இந்தப் படிப்பில் இணைய விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://tnou.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU)இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசினால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய (2002ஆம் ஆண்டின் எண் 27) சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடரவியலா ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடதிட்டங்களை வழங்குகிறது. தேசிய அளவில் செயல்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்று இந்தப் பல்கலைக்கழகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் படிப்பில் சேருவது எளிதாக ஆக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளும் வேண்டியவாறு எடுத்துக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பணிசார் பாடங்கள் (vocational courses) செய்தொழிலில் அறிவுப்பெறவும் புதிய வேலை வாய்ப்புகளை வளர்க்கவும் பயனுள்ளதாக உள்ளன.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் பி.எட். சிறப்புக் கல்வி பயில ஆசையா...!!!

2011ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி இப்பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாக கட்டிடத்தை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் கல்வி வளாகத்தில் திறந்து வைத்தார்.
இப்பல்கலைகழகத்தில் 2013-2014-ம் கல்வியாண்டு முதல் அனைத்துத் துறைகளிலும் முனைவர் (Ph.D.) ஆகிய ஆராய்ச்சிப் பட்டப்படிப்புகள் பகுதி (Part-time) மற்றும் முழுநேர (Full-time) முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பெருமைவாய்ந்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தான் தற்போது பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளா் இ.இரா.செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வழங்கி வரும் இரு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் படிப்பு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது என தமிழ

க அரசால் (அரசாணை எண் 56; 2012) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படிப்பை முடித்தவா்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்ற முடியும்.

இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு ஆகியவற்றை கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இணையதள முகவரி:

இந்தப் படிப்பில் சேர விரும்புவோா் விளக்கக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் இருப்பது அவசியமாகும். மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேடு ஆகியவற்றைப் பெறுவதற்கு https://tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசி எண்
மேலும் தகவல்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnou.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Open University (TNOU) offers education in B.Ed special course. The college also offers Certificate and Vocational courses. Applicants can apply for the admission to the program offline through the forms available at the study centers. For more details please login into https://tnou.ac.in/
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+