கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கல்வி ஆண்டிற்கான அரையாண்டுத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கடந்த மார்ச் 27 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நடப்பு கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்த நிலையில் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நடப்பு ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் வழக்கமாக நடத்தப்படும் அரையாண்டுத் தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மேலும், தனியார் பள்ளிகள் வேண்டுமென்றால் ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும், இதற்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரகூ வெளியிட்டுள்ளது.
அதில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்த அரையாண்டுத் தேர்வில் வரும் மதிப்பெண்களைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சி குறித்த முடிவுகளை எடுக்கக்கூடாது. தேர்வுக்கு என தனியே கட்டணம் வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.