பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான வங்கியில் பணியாற்ற விரும்புவோருக்கு ஏதுவாக தற்போது சிண்டிகேட் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைமை டிஜிட்டல் அதிகாரி, பிரதான இணக்க அலுவலர், தலைமை இடர் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சிண்டிகேட் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 03
பணி மற்றும் பணியிட விபரம்:-
- தலைமை டிஜிட்டல் அதிகாரி : 01
- பிரதான இணக்க அலுவலர் : 01
- தலைமை இடர் அதிகாரி : 01
கல்வித் தகுதி :-
- தலைமை டிஜிட்டல் அதிகாரி : எம்பிஏ, பி.இ, பி.டெக்
- பிரதான இணக்க அலுவலர் : பி.காம்
- தலைமை இடர் அதிகாரி : எம்பிஏ
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-
தலைமை டிஜிட்டல் அதிகாரி : இங்கே கிளிக் செய்யவும்
பிரதான இணக்க அலுவலர் : இங்கே கிளிக் செய்யவும்
தலைமை இடர் அதிகாரி : இங்கே கிளிக் செய்யவும்
வயது வரம்பு : 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.syndicatebank.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து horecruitment@syndicatebank.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 16.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.syndicatebank.in அல்லது https://www.syndicatebank.in/RecruitmentFiles/CRO_CDO_CCO_APPLN_FORMAT_30012019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.