பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான வங்கியில் பணியாற்ற விரும்புவோருக்கு ஏதுவாக தற்போது சிண்டிகேட் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மூத்த மேலாளர், மேலாளர், பாதுகாப்பு அதிகாரி என மொத்தம் 129 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சிண்டிகேட் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 129
பணியிடம் : பெங்களூர்
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- மூத்த மேலாளர் - 5
- மேலாளர் - 50
- மேலாளர் (சட்டம்) - 41
- மேலாளர் (கணக்கு) - 3
- பாதுகாப்பு அதிகாரி - 30
கல்வி தகுதி : பணிக்கு ஏற்றவாறு fல்வித் தகுதிகள் மாறுபடும். அதிகார அறிவிப்பைக் காணவும்.
வயது வரம்பு :
- 25 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :
மூத்த மேலாளர் பணி : ரூ. 42,020 முதல் ரூ.51,490 வரையில்
இதர பணிகளுக்கு : ரூ. 31,705 முதல் ரூ.45,950 வரையில்
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












