மத்திய அரசில் பணியாற்ற வேண்டும் என்று காத்திருக்கும் சட்டப் படிப்பு மேற்கொண்டவர்களுக்கு ஏதுவாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்ட ஆராய்ச்சி உதவியாளர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : இந்திய உச்ச நீதிமன்றம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சட்ட ஆராய்ச்சி உதவியாளர்
கல்வித் தகுதி : எல்எல்பி (இளநிலை சட்டப் படிப்பு)
முன் அனுபவம் : தேவை இல்லை
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.sci.gov.in/pdf/recruitment/advt_lawclerk2019-Website.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 200
- எஸ்.டி., எஸ்.சி, பி.டபிள்யு.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sci.gov.in/pdf/recruitment/advt_lawclerk2019-Website.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












