நாட்டின் முதன்மை வங்கிகளில் முன்னிலையில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
நாட்டில் உள்ள வங்கிகளில் அதிக கிளைகளைக் கொண்டது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாகும். தேசியமயமாக்கப்பட்ட இந்த வங்கியை தமிழில் பாரத ஸ்டேட் வங்கி என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. மத்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் ஏராளமான கிளைகள் உள்ளன.
ந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. இருப்பினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

இந்த வங்கி இந்தியத் துணைக் கண்டத்திலேயே பழமைவாய்ந்த வங்கியாகும். 1806-ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது.
1955ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமை ஆக்கியபோது பாரத ரிசர்வ் வங்கி 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. 2008-ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.
இந்த பெருமைமிகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வாடிக்கையாளர் ஆதிரவு மற்றும் விற்பனை பிரிவில் காலியாக உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட்ஸ் பதவியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் அசோசியேட் பிரிவில் காலியிடங்கள் 8,283 உள்ளன. இங்கு சம்பளமாக மாதம் ரூ.17,900 - 47,920 வரை கிடைக்கும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
1.4.2023 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், முதன்மைத் தேர்வு 2024 பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும். தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வுத்தாள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் அமைந்திருக்கும் என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் நடத்தப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். இதனை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த நபர்கள் www.bank.sbi/careers என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை எதிர்கால பயன்பாட்டுக்காக டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பங்களை அனுப்ப 7.12.2023 கடைசி நாளாகும்.


Click it and Unblock the Notifications












