SSC CGL Recruitment Notification 2023: ஏழாயிரம் காலிப் பணியிடங்களுக்கு அழைப்பு...?

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட துணை அலுவலகங்கள் உட்பட மத்திய அரசின் அமைச்சகங்களில், காலியாக உள்ள 7,500 ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு பணியிடங்களுக்கு, தேசிய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

நிர்வாகம்: பணியாளர் தேர்வாணைம்(எஸ்.எஸ்.சி.,)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.05.2023

பணியிடங்கள் விவரங்கள்

Combined Graduate Level (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு)

பணியிடங்கள் எண்ணிக்கை: 7,500

எஸ்.எஸ்.சி.,யில் புதிய அறிவிப்பு?

விண்ணப்பிக்கும் முறை

தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், மே.,3க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

7,500 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்.,3 ஆம் தேதி தொடங்கி உள்ளது.

தேர்வுக்கு மே.3ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

நேரடியாக சலான் முறையில் கட்டணம் செலுத்த மே.5 கடைசி ஆகும்.

விண்ணப்பங்களில் திருத்தங்களை மே.7,8 ஆம் தேதிகளில் மேற்கொள்ள நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு தோராயமாக ஜூலை மாதம் நடைபெறும்.

கடந்த முறை இரண்டு கட்டங்களாக நடந்த தேர்வில், விரிவாக எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால், முதல்கட்டமாக கணினி வழியில் நடந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது.

13 மொழிகளுக்கு தேர்வெழுத வாய்ப்பு

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்தது.

இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு எழுதலாம். தற்போது அறிவிக்கப்பட்ட தேர்வின் மூலம் தோராயமாக 7 ஆயிரத்து 500 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு முறை

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம் Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கு, காலியாக உள்ள 7,500 (தோராயமாக) பணியிடங்களை நிரப்பப்படும்.

பதவிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடுகிறது. ஆகையால், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்ற விபரங்களை விரிவாக படித்து, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான சலுகை குறித்து அறிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/SC/ST/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணத்தை மே 4 வரை செலுத்தலாம்.

ஊதியம்

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில், குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். பதவிக்கு ஏற்றவாறு கோரப்பட்ட கல்வி தகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளவும்.

how to apply ssc exam, how to prepare ssc exam

தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை 'க்ளிக்' செய்யவும்.

முகப்புப் பக்கத்தில் Latest news பகுதியில் உள்ள அறிவிப்பை 'க்ளிக்' செய்யவும்.

அத்திரையில் பணி வாய்ப்பு பற்றிய முழு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அறியலாம்.

முகப்பு திரையில் லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!

https://ssc.nic.in/

காலிப் பணியிடங்கள் மாநிலம், பிரிவு விவரம் அறிய...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_03042023.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Staff Selection Commission, also known as SSC, has invited applications for 7,500 Combined Graduate Level Examination vacancies through Multi Skilled Examination. Applications are invited from eligible candidates through online mode.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+