ரயில்வே, தேர்தல் ஆணையம், ஆயுதப்படை ஆகிய மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்களில் காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் பணியிடங்களுக்கு, தேசிய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
மத்திய அரசின் ஐந்து துறைகளில், மொத்தம் 384 பணியிடங்களுக்கு, அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் லிமிடெட் டிபார்ட்மென்டல் போட்டி தேர்வு( 2018, 2019க்கான காலிப்பணியிடம்) நடத்தப்பட உள்ளது.
நிர்வாகம்: பணியாளர் தேர்வாணைம்(எஸ்.எஸ்.சி.,)
மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.09.2023

பணியிடங்கள் விவரங்கள்
மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள் பணிக்கு 342, ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராபர் பணிக்கு 17, ஆயுதப்படை தலைமையக ஸ்டெனோகிராபர் பணிக்கு 19, இந்திய தேர்தல் ஆணையம் ஸ்டெனோகிராபர் பணிக்கு 2, இந்திய வெளியுறவு சேவை பிராஞ்ச் (பி) ஸ்டெனோகிராபர் பணிக்கு 4 பேர் என, மொத்தம் 384 ஸ்டெனோகிராபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை: 384
விண்ணப்பிக்கும் முறை
தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், செப்.,25க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
384 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு செப்.,4 ஆம் தேதி தொடங்கி உள்ளது.
தேர்வுக்கு செப்.25ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
கணினி வழியிலான தேர்வு தோராயமாக, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும்.
கல்வித் தகுதி
காலிப் பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில், பணிக்குரிய தகுதி, அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 2018 ஆட்சேர்ப்பு ஆண்டின் படி, 01.07.2018ம் தேதியின் அடிப்படையிலும், 2019 ஆட்சேர்ப்பின் படி, 01.07.2019 தேதியின் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி, ,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வு வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
ஊதியம் விபரம், தேர்வுக்கான பாடம், தேர்ச்சி மதிப்பெண்கள் விபரம், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முழு விவரங்களை அறிந்து கொள்ள
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
பதவிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு, சலுகைகள், ஊதியம் ஆகியவை மாறுபடுகிறது. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்ற விபரங்களை விரிவாக படித்து, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான சலுகை குறித்து அறிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
how to apply ssc exam, how to prepare ssc exam
தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை 'க்ளிக்' செய்யவும்.
முகப்புப் பக்கத்தில் Latest news பகுதியில் உள்ள அறிவிப்பை 'க்ளிக்' செய்யவும்.
அத்திரையில் பணி வாய்ப்பு பற்றிய முழு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அறியலாம்.
முகப்பு திரையில் லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












