ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.!

By Saba

சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் செவிலியர்களுக்கு வேலை- அழைக்கும் சவூதி.!

 

சவூதி அரேபியாவில் 35 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி. தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்களைச் செவிலியர்களாக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு கேரள மாநிலம், கொச்சியில் வரும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் நடைபெறும்.

சவூதி அரேபிய அமைச்சகத்தினரால் நடத்தப்பட உள்ள இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரர் ஐந்து வருடப் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

இதில், தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.80,000 வரையில் வழங்கப்படும். மேலும், இலவச விமான பயணச் சீட்டு, உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 35 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டதிட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

இப்பணியிடத்தில் சேர விருப்பமுள்ளவர்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மே 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த கூடுதல் விபரங்களை அறிய 044-22505886 / 22502267 / 8220634389 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது www.omcmanpower.com என்னும் வலைத்தள முகவரியினையும் தொடர்பு கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Staff Nurse Jobs in Saudi Arabia - 45 Staff Nurse Openings in Saudi
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X