மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற www.ssc.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம். மத்திய அரசின் அறிவிப்பால் இந்த வேலைக்காகக் காத்திருந்த தேர்வர்கள் குஷியடைந்துள்ளனர்.
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) என்பது இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்h'd' ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது ஒரு தலைவரையும், இரண்டு செயலாளர்களைக் கொண்டு செவ்வனே செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்திய அரசின் கெஜட் பதிவில்லாத பிரிவு பி மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்துகிறது.
மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இத்தேர்வாணையம் செயல்படுகிறது.

மத்திய அரசின் துறைகளால் அறிவிக்கப்பட்ட காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்புதல், சரியான வேலைகளுக்கான சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்வை நியாயமான முறையில் நடத்துதல், விண்ணப்பதாரர்களின் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட ஆண்டில் தேர்வுகள்/தேர்வு காலண்டர் அட்டவணை குறித்த தகவல்களை சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்தல், தேர்வு அறிவிப்பின் முறையாக விளம்பரம் செய்தல், சரியான நேரத்தில் தேர்வு நடத்துதல், தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் அறிவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வலர்களை பதவியில் சரியான நேரத்தில் நியமனம் செய்தல் ஆகியவை எஸ்எஸ்சி-யின் முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.
இந்நிலையில் புதிய அறிவிப்பு தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு வகையான துறைகளில் காலியாக பல இடங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு காலியாகவுள்ள இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல்) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான இனிய அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் துறைகளில் உள்ள இந்தப் பணியிடங்களுக்குத் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 18-ம் தேதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்தப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக
தமிழகம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட தென்மண்டலத்தில் கணினிவழி போட்டித்தேர்வு ஜுன் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 7 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள், வயது வரம்பு , தேர்வுமுறை, ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் www.ssc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












