மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (SSC) மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1350-க்கும் மேற்பட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிட விபரங்கள்:
DEO, கிளார்க், UDC, உதவி ஆய்வாளர், ஜூனியர் கம்ப்யூட்டர், ஆய்வாளர் (ஸ்டெனோகிராபி), லேப் அசிஸ்டெண்ட், அலுவலக உதவியாளர், Technical Operator, ஸ்டெனோகிராபி என மொத்தம் பல்வேறு துறைகளில் 1,355 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகளும், வயது வரம்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். உச்ச வயது வரம்பு, பணிகளுக்கும், பிரிவினருக்கும் ஏற்றவாறு மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : SSC 2020 பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, மார்ச் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
SSC Recruitment 2020 முக்கிய நாட்கள்:-
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 21 பிப்ரவரி 2020
விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 20 மார்ச் 2020
ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 23 மார்ச் 2020
வங்கி வழி விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : 25 மார்ச் 2020
கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள் : 10-12 ஜூன் 2020