வானிலை ஆய்வு மையத்தில் 1102 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு விண்ணப்பிக்க ரெடியா!!

Posted By:

வானிலை ஆராய்ச்சி உதவியாளர் பதவிபெற விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம் . வானிலை ஆய்வு மையத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு நிரப்பபட உள்ள அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .

வானிலை ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு எஸ்எஸ்சி நடத்தும் பணி வாய்ப்பு

வானிலை ஆய்வு மையத்தில் விண்ணப்பிக்க  ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . வானிலை ஆய்வு மையத்தில் சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட் பதவி காலியாக உள்ளது . , மொத்த நிரப்படவுள்ள காலிப்பணியிடங்கள் 1102 ஆகும் . இந்தியா முழுவதும் பணியிடம் உள்ளன. இப்பணிக்கான சம்பளம் ரூபாய் 9,300 முதல் 34,800 தரவூதியம் ரூபாய் 4,200 ஆகும் .

இயற்பிலை பாடமாக கொண்டு பிஎஸ்சி பட்டப்படிப்பில் 60% சதவீகிதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கம்பியூட்டர் சயின்ஸ் ,ஐடி , கம்பியூட்டர் அப்ளிகேஷன் போன்ற பிரிவுகளை இயற்பியலுடன் சேர்த்து படித்திருக்க வேண்டும் . எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் . மேலும் பிளஸ்2 வில் இயற்பியல் படித்தவராக இருந்திருக்க வேண்டும். இயற்பியல் படித்தவர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ள வேண்டும் . 

இப்பதவிகளுக்கான வயதுவரம்பு 04.08.2017 அன்று , 30க்குள் இருக்க வேண்டும் . தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு ,கல்வித்தகுதி, இதரத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 20.11.2017 முதல் 27.11.2017 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2017 ஆகும் . வானிலை ஆய்வு மைத்தில் பணி வாய்ப்பு என்பது மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும் . வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினால் வேலை வாய்ப்பு உறுதியாகும் . எஸ்எஸ்சி பணியின்  முழுவிவரம்     அறிந்துகொள்ள www.ssc.nic.in என்ற இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் . இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் ரூபாய் 100 செலுத்த வேண்டும் பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை . விண்ணப்பிக்க எஸ்எஸ்சியின் ஆன்லைன் தளம்  www.ssconline.nic.in  மூலம் விண்ணப்பிக்கலாம் . 

சார்ந்த பதிவுகள் :

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேணுமா 

இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு சுதந்திர பறவையாக நாட்டுக்காக பறக்க வாய்ப்பு 

பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடு

English summary
above article tell about ssc recruitment notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia