எஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

எஸ்எஸ்சி தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . டெக்னிகல் சூப்பிரெண்டு பணிக்கு 3 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கைத்தறி தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் . அத்துடன் இப்பணியிடங்களுக்கான சம்பளம் 9300 மற்றும் கிரேடு பே தொகையாக ரூபாய் 4000 பெறலாம்.

வெர்க் சாஃப் சூப்பிரெண்ட்டெண்ட் பணிக்கு  சேலத்தில் பணியாற்ற ஒரு பணியிடம்      நிரப்பபடவுள்ளது.  இங்கு பணியாற்ற ரூபாய் 44900 சம்பளமாக பெறலாம் அலவன்ஸ் தொகையும் பெறலாம் . இங்கு பணியாற்ற பட்டம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .

எஸ்எஸ்சி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பணிக்கு 10 முதல் பட்டம் படித்தவர் வரை தேவைப்படுகின்றனர்

சீனியர் இன்ஸ்ட்ரக்டர் தேசிய கைத்தறி நிறுவனத்தில் பணிபுரிய டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் நான்கு வருடம் முடித்திருக்க வேண்டும். இரண்டு வருட கைதறி பின்னலாடைத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . 30 வயதுக்குள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

மத்திய அரசின் உடல்நலத்திற்கு மெடிக்கல் அட்டண்டெண்ட் பணிக்கு 34 காலிப்பனியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு முடித்திருக்க வேண்டும் அத்துடன் முதலுதவி படிததற்க்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . 25 வயதுக்குள் இருக்க வேண்டும் . சம்பளமாக ரூபாய் 5200 முதல் 1800 பெறலாம்

மத்திய அரசின் நலவாழ்வுத் துறைக்கு மெடிக்கல் அட்டண்டெண்ட் பணிக்கு 15 பெண்கள் தேவைப்படுகின்றனர். 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் முதலுதவிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . 25 வயதுக்குள் இருக்க வேண்டும் .

கன்சர்வேசன் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்க்காலிஜக்கல் பணிக்கு டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடிதிருக்க வேண்டும் . 25 வயதுக்குள் இருக்க வேண்டும் .

ஜூனியர் கன்சர்வேசன் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . இவால்வேசன் அஸிஸ்டெண்ட் பணிக்கும் கணிதம் / பொருளாதாரம் /சோஸியாலஜி முடித்திருக்க வேண்டும் . சம்பளமாக ரூபாய் 29200 வழங்கப்படும் .

இவ்வாறு எஸ்எஸ்சியின் பணியிடம் நிரப்புதல் குறித்து விண்ணபிக்க செப்டம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம் . எஸ்எஸ்சியின் பணிவிவரங்கள் குறித்து அறிந்துகொள்ள http://www.sscsr.gov.in/SELECTION-POSTS-SR-2-2017-COMBINED-ADVERTISEMENT.pdf
மேற்கண்ட இணையதளத்தினை டவுன்லோடு செய்து அறிந்துகொள்ளலாம் .இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .

மொத்தம் 66 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பில் சென்னை மற்றும் சேலம்   பணியிடங்களுக்கான அறிவிப்பில் வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 100 கேள்விகள் ஒரு மணி நேரம் மற்றும் நெகடீவ் மதிபெண்  இருக்குகின்றது.

சார்ந்த பதிவுகள்:

எஸ்எஸ்சியின் கிழக்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு விண்ணபிக்க ரெடியா !!

English summary
here article tell about ssc south zone notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia