போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான எஸ்எஸ்சி நோட்டிஃபிகேசன்

Posted By:

எஸ்எஸ்சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி மத்திய அரசின் சர்வீஸ் கமிசன் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ்சியின்  வானிலை அராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஸ்டாஃப் செலக்ஸன் கமிசன் என அழைக்கப்படும் எஸ்எஸ்சி வானிலை  ஆராய்ச்சி நிறுவனத்தின் வானிலை ஆராய்ச்சி துறையில் நிரப்பபடவுள்ள குரூப் 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.
எஸ்எஸ்சியின் அறிவிப்பு படி வானிலை ஆராய்ச்சி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .
எஸ்எஸ்சி தேர்வு காலியிடங்கள் 1102 ஆகும். பணியின் பெயர் சைண்டிஃபிக் அசிஸ்டெண்ட் ஆகும் .
அறிவியல் துறையில் இயற்பியல் படிப்பு முடித்தவர்கள் மற்றும் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு ஆகஸ்ட் 4ஆம் தேதியில்  30 வயதுக்குள் இருக்க வேண்டும் . மாதசம்பளம் ரூபாய் 9,300 முதல் 34,800 உடன் தரஊதியம் ரூபாய் 4200 ஆகும்.

தேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் சான்றிதல் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வுகள் போன்று இல்லாமல் எளிதாக இருக்கும் இந்த தேர்வு முறைக்கு போட்டி தேர்வு எழுத ஆர்வம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் .

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணமாக ரூபாய் 100 நியமிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2017 ஆகும் .எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 20.11. 2017- 27.11.2107 ஆகும்.மேலும் எஸ்எஸ்சியின் இணையத்தளத்தில் www.ssc.nic.in அறிந்துகொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள் :

நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு . வங்கி வேலைக்காக காத்திருபோர் விண்ணபிக்கலாம் 

English summary
here article tell about ssc notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia