எஸ்எஸ்சியின் மேற்கு பகுதிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

Posted By:

எஸ்எஸ்சி நடத்தும் மேற்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . எஸ்எஸ்சி நடத்தும் மேற்கு இந்திய பகுதிகளில் சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் , அஸிஸ்டெண்ட் எக்ஸாமினர், ஜூனியர் கெமிஸ்ட் , ஹேண்ட் கிராபட் புரோமோசன் ஆஃபிஸர்  போன்ற பல பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்சியின் மேற்கு பகுதிகளுக்கான வேலை அறிவிப்பில் விண்ணப்பிக்க செப்டம்பர் 27.9.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மொத்தம் எஸ்எஸ்சி நிரப்பும் பணியிடங்களின் எண்ணிக்கை 75 ஆகும் .

வேலைவாய்ப்பு அறிவிப்பினை எஸ்எஸ்சி  வெளியிட்டுள்ளது

கல்வித்தகுதி :

எஸ்எஸ்சியின் மேற்கு பகுதி பணியிடங்களின் அறிவிப்பில் சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டதாரி படிப்பை அக்ரோனமி/ பிளாண்ட் பிரிடிங் அத்துடன் / ஜெனிடிக்ஸ் பார்ம் துறையில் விண்ணப்பிக்க பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

அஸிஸ்டெண்ட் எக்ஸாமினர் பணிக்கு அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

ஜீனியர் கெமிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்க முதுகலைப்பட்டம் வேதியல் துறையில்     பெற்றிருக்க வேண்டும் . எண்ணை மற்றும் உணவு தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

ஹேண்ட் கிராஃப்ட்ஸ் புரோமோஸன் ஆஃபிஸர் பணிக்கு விண்ணப்பிக்க ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் வடிவமைப்பு துறையில் விண்ணப்பிக்க நான்கு  வருடம் படித்திருக்க வேண்டும் .
ஃபெர்டிலைசர் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க அகிரிகல்சர் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . இன்னும் மற்ற துறைகளின் கல்வித்தகுதி அறிய எஸ்எஸ்சியின் இணையதளத்தில் காணலாம் .

எஸ்எஸ்சியின் மேற்கு பகுதியில் விண்ணப்பிக்க அனைத்து பதவிகளுக்கும் 18 முதல் 27 வயதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது . மேலும் இது பணியிடங்களுகேற்ப மாறுபடும் . எஸ்எஸ்சியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 9,300 முதல் 34,800, மற்றும் 5,200 முதல் 20, 200 வரை சம்பளம் பெறலாம் . மேலும் கிரேடு பே தொகையும் கிடைக்கும் பணியிடங்களுக்கு ஏற்ப சம்பளதொகை மாறுபடும் .

எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் முறையானது கணினி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . தேவைப்படும் தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் http://ssconline.nic.in/ மூலம் பெறலாம் . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . பொதுபிரிவினர் மற்றும் பிர்ப்படுத்தப்பட்டோர்க்கு கட்டண சலுகையில்லை மற்ற பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . விண்ணப்ப தொகையை ஆன்லைன் மூலமாகவோ வங்கி செலான் வழியாகவோ மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக செலுத்தலாம் .

சார்ந்த பதிவுகள்:

எஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

எஸ்எஸ்சியின் கிழக்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு விண்ணபிக்க ரெடியா !!

இந்திய மருத்துவத்தில் புள்ளியலாளர் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க

 தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு !! 

English summary
here article tell about ssc job notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia