நாட்டின் மத்திய பாதுகாப்புத்துறையின் (ராணுவத்துறை) கீழ் இயங்கும் பல்வேறு துணை ராணுவப் படைகளில் 'கான்ஸ்டபிள்' பதவியில் 26,146 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய அரசு தேர்வாளர் பணி ஆணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்தத் வேலை இடங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய துணை ராணுவப் படைகள் (Paramilitary forces of India) என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படைப் பிரிவுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இப்படைகள் உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளைச் செய்வதுடன் நாட்டின் பன்னாட்டு எல்லைகளையும் மற்றும் பன்னாட்டு கடல் எல்லைகளையும் கண்கானித்து காக்கிறது.

மத்திய அரசின் துணை ராணுவப் படையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை ,
சிறப்பு எல்லைப்புறப் படை, விரைவு அதிரடிப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை, சகஸ்த்ரா சீமா பால் படை,
தேசிய பாதுகாப்புப் படை, சிறப்பு எல்லைப்புறப் படை, அசாம் ரைப்பிள்ஸ், ராஷ்டிரிய ரைபிள்ஸ் என பல்வேறு துணை ராணுவப் படைகள் அமைந்துள்ளன.
எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்., ) 6174 பணியிடங்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.எஸ்.ஐ.எப்.,) 11,025 பணியிடங்கள், மத்திய ரிசர்வ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) 3337 பணியிடங்கள், சகஸ்த்ரா சீமா பால் படையில் (எஸ்.எஸ்.பி.,) 635 பணியிடங்கள், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) 3189 பணியிடங்கள், ஆயுத ரிசர்வ் படையில் (ஏ.ஆர்.) 1490 பணியிடங்கள், சிறப்பு எல்லைப்படையில் (எஸ்.எஸ்.எப்.) 296 பணியிடங்கள் என மொத்தம் 26,146 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும், வயது அடிப்படையில் 1.1.2024-ம் தேதியின்படி 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உயரம், ஆணாக இருந்தால் 170 செ.மீட்டரும், பெண்ணாக இருந்தால் 157 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும். மேலும் அனைவருக்கும் மருத்துவ சோதனையும் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வு மையங்களாக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள்(31.12.2023) அனுப்பவேண்டும்.
மேலும் கூடுதல், விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












