மத்திய அரசிற்கு உட்பட்ட அசாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPF), என்ஐஏ, எஸ்எஸ்எஃப் மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25,271 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPF), என்ஐஏ, எஸ்எஸ்எஃப் மற்றும் ரைபிள்மேன்
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC)
பணி : Constable (General Duty) மற்றும் Rifleman (General Duty)
மொத்த காலிப் பணியிடங்கள் : 25,271
கல்வித் தகுதி :
விண்ணப்பத்தார்கள் 10-ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்வை முடித்திருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் தங்களது தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆகஸ்ட் 1, 2021 க்குள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.08.2021 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ. 21,700 முதல் ரூ.69,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : SSC சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 31.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கணினி வழியிலான தேர்வு மற்றும் உடற் தகுதித் திறன், மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications

