இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமான் பால் படைப்பிரிவில் காலியாக உள்ள 150 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சாஸ்த்ரா சீமான் பால்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கான்ஸ்டபிள் பொது பணி (விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு)
மொத்த காலியிடங்கள் : 150
வயது வரம்பு : 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் ஏதேனும் ஓர் விளையாட்டில் தேசியளவில் அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
உடற்தகுதி :
- ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் உயரமும், 80 செ.மீட்டர் மார்பளவும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
- பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : விளையாட்டு தகுதி, மருத்துவ தகுதி மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை : www.ssbrectt.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.08.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ssbrectt.gov.in என்னும் இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












