மாணவச் செல்வங்களே...மிஸ் பண்ணாதீங்கள்... சென்னை, திருச்சி, நெல்லையில் கல்வி கண்காட்சி

ஊடக நிறுவனமான தினத்தந்தி நடத்தும் ஆண்டு கல்வி கண்காட்சி இந்த ஆண்டு திருச்சியிலும், சென்னையிலும், திருநெல்வேலியிலும் நடைபெறவுள்ளது. திருச்சியில் தாஜ் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 9 தேதிகளிலும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 12, திருநெல்வேலி நூற்றாண்டு மண்டபத்தில் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த சிறப்பு வாய்ந்த கல்வி கண்காட்சியின் பிளாட்டினம் ஸ்பான்சராக எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (திருச்சிராப்பள்ளி) உள்ளது. மேலும் அசோசியேட் ஸ்பான்சர்களாக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உயர் கல்வி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி, ராஜலக்ஷ்மி தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. இந்த நிறுவனங்கள் தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து இந்த கல்விக் கண்காட்சியை நடத்தி சிறப்பிக்க உள்ளன.

இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் நடைபெறும். இக்கண்காட்சிக்கு வரும் மாணவ, மாணவிகள், பெற்றோர் என அனைவருக்குமே அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
12-வது தேர்ச்சி பெறும் மாணவர்கள் இதையடுத்து தொடரப்போகும் உயர்கல்வி குறித்த முழுமையான திட்டமிடல் தொடர்பான ஆலோசனைகள் இந்த கண்காட்சியில் கிடைக்கும்.

மாணவச் செல்வங்களே...மிஸ் பண்ணாதீங்கள்... சென்னை, திருச்சி, நெல்லையில் கல்வி கண்காட்சி

மாணவர்கள் முழுமையாக பயன்பெறும் பொருட்டு மருத்துவம், பொறியியல், வணிகவியல், நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனுபவமிக்க கல்வியியல் ஆலோசகர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

மாணவ, மாணவிகள் தாங்கள் 12-ம் வகுப்பு முடித்த பின்னர் என்ன மாதிரியான படிப்புகளைப் படிக்கலாம்? எந்த படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்? தற்போது வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு எது? தங்கள் திறமைக்கு ஏற்ப எந்த கல்வியை படிக்கலாம்? எந்த கல்வியை எந்த கல்வி நிறுவனத்தில் பயில்வது சிறப்பாக இருக்கும்? மேலும் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய வகை படிப்புகள் என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த கல்வி கண்காட்சி விடை தரும்.

மருத்துவம் பொறியியல் என்று இல்லாமல் எல்லா வகை துறைகளையும் சார்ந்த கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் கல்வி கண்காட்சியாக உள்ளதால், பெற்றோர்கள் தங்களின் சந்தேகத்தையும் மாணவர்களின் திறனை ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்வியை தேர்வு செய்வதற்கு இக்கண்காட்சி சிறப்பாக வழிவகுக்கும் எனலாம். கூடுதலாக இக்கண்காட்சியில் பங்கேற்கும் கல்வியியல் ஆலோசகர்களிடம் ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பையும், பொதுவான தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்கள் கேட்டுப் பயன் பெற முடியும்.

மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்
இந்தக் கல்விக் கண்காட்சியில் பொறியியல் படிப்புகளில் எந்த வகை படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பு கொடுக்கும் என்பது முதற்கொண்டு அரசு உயர் பணிகளில் சேர்வதற்கு எந்த படிப்பை கல்லூரியில் படிக்க ஆரம்பித்து போட்டித்தேர்வுக்கு தயாராவது என்பதுவரை தகவல்களை மாணவர்கள் இக்கண்காட்சியில் பெற முடியும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் சேர்க்கை வழிமுறைகள், கல்வி கட்டண விவரங்கள், மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி உதவித்தொகை, கட்டணச் சலுகைகள் போன்ற விவரங்களையும் கல்வி கண்காட்சி அரங்கத்தில் அறிந்து கொள்ள முடியும்.

உணவு துறை தொடர்பான கேட்டரிங் டெக்னாலஜி, உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் நுட்பம், தற்போது வளர்ந்து வரும் லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் எனப்படும் சரக்கு போக்குவரத்து நிர்வாகம் இன்று உலகையே அசத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற எந்த வகை கல்வியை எந்த கல்லூரியில் பயிலலாம் என்பதையும் இங்குள்ள பிரபல கல்வி ஆலோசகர்கள் மாணவர்களுக்கு அளிக்க காத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த கல்வி கண்காட்சி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தையை எந்த படிப்பில் சேர்க்கலாம் என்பதை எளிதில் தேர்வு செய்ய முடியும்.
மேலும் அவ்வாறு படிப்பைத் தேர்வு செய்த பின்னர் அந்தக் குறிப்பிட்ட படிப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்களில் எதில் சேர்க்கலாம் என அறிய ஒவ்வொரு கல்வி நிறுவனமாக சென்று வருவது மிகக் கடினம். ஆனால் இக்கண்காட்சி மூலம் , இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ள அனைத்து முன்னணி கல்வி நிறுவனங்கள் பற்றிய மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும், அதாவது கல்வி கட்டணம், பாட முறை, பயிற்றுவிக்கும் முறை, கல்லூரியில் இருக்கும் இதர வசதிகள், விடுதி வசதி, மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள், அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி கூடங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கே இந்த கண்காட்சியில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மாணவ, மாணவிகள் தவறாமல் இங்கு வந்த வேண்டிய யோசனைகளைப் பெற்றுச் செல்லலாம்.
புதிய படிப்புகள் அறிமுகம்

மேலும் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் புதிய படிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் பல புதிய படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இவற்றை பற்றி தெரிந்து கொள்வது மாணவர்களுக்கு தேவையான படிப்பை தேர்ந்தெடுக்க மிகவும் பயனுள்ளதாய் அமையும்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள படிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும், அவற்றில் சேர்வதற்கான முறைகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும் இந்த கண்காட்சி உதவுகிறது.

இதற்காக பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் ஸ்டால்கள் இங்கு அமையவுள்ளன. இங்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களுக்குத் தேவையான கல்லூரி, பல்கலைக்கழகங்களின் படிப்பு, கட்டண விவரங்களை அறிந்து கொண்டு சேர முடியும்.

இந்தக் கண்காட்சி திருச்சியில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 9 தேதிகளிலும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 12, திருநெல்வேலியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Education Fair will be organised by Daily Thanthi group in association with SRM Institute of Science and Technology on April 11 and 12 at Chennai Trade Centre, Nandambakkam. At least 60 stalls have been set up for the 2-day expo.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+