தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக இப்பணியிடங்களுக்கு தொலைபேசியின் மூலமாகவே தேர்வு நடைபெறவுள்ளது.

தெற்கு ரயில்வே துறையின் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் காலியாக உள்ள நர்சிங், சூப்பிரண்ட், பிஸியோதெரபி, டைட்டிசியன், ரேடியோ கிராபர் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, மொத்தம் 197 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், அதிகபட்சமாக நர்சிங் சூப்பிரண்ட் பணிக்கு 110 இடங்களும், உதவியாளர் பணியிடத்திற்கு 68 இடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
| நர்சிங் சூப்பிரண்ட் | 110 | ரூ.44,900 | 22 முதல் 40 |
| பிஸியோதெரபிஸ்ட் | 3 | ரூ.35,400 | 18 முதல் 33 |
| டைட்டிசியன் | 2 | ரூ.44,900 | 18 முதல் 33 |
| ஹேமோடையாலிசிஸ் டெக்னீசியன் | 4 | ரூ.35,400 | 20 முதல் 33 |
| ஸ்கில்டு எலெக்ட்ரானிக் டெக்னீசியன் | 2 | ரூ.29,200 | 18 முதல் 33 |
| மருத்துவமனை உதவியாளர் | 68 | ரூ.18,000 | 18 முதல் 30 |
| ஆய்வக உதவியாளர் | 4 | ரூ.21,700 | 18 முதல் 33 |
| ரேடியோகிராபர் | 4 | ரூ. 29,200 | 18 முதல் 33 |
இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
இதனிடையே, கொரோனா நோய் தொற்றல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட பணியிடங்களுக்கு தொலைபேசி வாயிலாகவே நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 22 ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். மேலும் விபரங்களை அறிய https://sr.indianrailways.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












