எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க

Posted By:

இந்தியாவின் மாபெரும் வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு. பொதுத் துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் 21 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் பெறலாம் . எஸ்பிஐ வங்கியில் வருடா வருடம் சிறப்பு அதிகாரி, புரோபெஸனரி அதிகாரி, கிளார்க் பணியிடங்கள் நிரப்படுவது வழக்கமாகும் . இந்தாண்டுக்கான எஸ்பிஐ பணியிக்கான அறிவிப்புகள் படிப்படியாக வெளியிடப்படுகிறது . 

சிறப்பு அதிகாரி பணியிடம் விண்ணப்பிக்க தயாராகுங்க , எஸ்பிஐ வங்கி பணிவாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!!

பொறியியல் துறையில் பிஇ, பிடெக், எம்பிஏ, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணம் ரூபாய் 600 ஆகும் . விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் . பின்வரும் இணையத் தளம் மூலம் விண்ணப்பிக்க்லாம் www.sbi.co.in.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 10 ஆகும்.  ஆகவே தகுதியும் விருப்பம் உடையோர் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்களை அறிய இணையத்தளத்தை பயன்படுத்தலாம் .

இந்தியாவின் முக்கிய வங்கியான எஸ்பிஐ வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு வங்கி பணியில் பணியாற்ற காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும் . நல்ல சம்பளத்துடன் நாடு முழுவதும் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்போது இதனை பயன் படுத்த வேண்டும் . எஸ்பிஐ பணிவாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்த வேண்டும் . எஸ்பிஐ சிறப்பு அதிகாரி பணிவாய்ப்பு கணினித்துறைக்கான அழைப்பு ஆகும் . தேர்வுக்கான கேள்வியும் கணினித்துறியயில் இருந்து கேட்கப்படும் . வங்கி பணிக்கு தயாராவோர்கள் அதுகுறித்து அறிதல் நலமாகும் .

சார்ந்த பதிவுகள்:

பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடு 

எஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு 

நபார்டு வங்கியில் அதிகாரி பணிகள்...108 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்

English summary
here article tell about bank job notification for specialist officer
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia