தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த சிறப்புவாய்ந்த தெற்கு ரயில்வேயில் தான் தற்போது பல்வேறு பிரிவுகளில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
தெற்கு ரயில்வேயில், மெடிக்கல் லேப் டெக்னீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கார்பென்டர், பிளம்பர் உள்ளிட்ட பிரிவுகளில் ரயில் பெட்டி தொழிற்சாலை, பெரம்பூர் 1357, பொன்மலை ரயில்வே தொழிற்சாலை, திருச்சி 679, சிக்னல், தொலைத்தொடர்பு தொழிற்சாலை, போத்தனுார் 824 என மொத்தம் 2860 இடங்கள் உள்ளன.
எனவே,இந்த பொன்னான வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தெற்கு ரயில்வே பணியிடங்ளுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

தெற்கு ரயில்வே பணியிடங்ளுக்கான வயது விவரம்: 15 -24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு ரயில்வே பணியிடங்ளுக்கான தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தெற்கு ரயில்வே பணியிடங்ளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: தெற்கு ரயில்வே பணியிடங்ளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்தவேண்டும்.
ண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
கடைசிநாள்: தெற்கு ரயில்வே பணியிடங்ளுக்கு வரும் 28.2.2024 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்..
இணையதள முகவரி : கூடுதல் விவரங்களுக்கு sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












