ரயில்வேயில் 'அப்ரண்டிஸ்' பணி 2022
பெரம்பூர், அரக்கோணம், சென்னை ஆகிய கோட்டங்களில், ரயில்வே பணிமனைகளில் மாத உதவி தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு (Apprenticeship)தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
மறக்காதீங்க... இன்று கடைசி நாள்.... ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்பதால் மாலை 5 மணி வரை உங்களுக்கு டைம் இருக்கு பாஸ்...!

பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை ஆய்வகம் மற்றும் பணிமனைகளில் உள்ள எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
டீசல் மெக்கானிக், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், வயர் மேன், பெயிண்டர், உள்ளிட்ட பணியிடங்களுக்கும், மருத்துவ ஆய்வகத்தில் உள்ள ரேடியாலஜி, இதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில், ஆய்வக உதவியாளர் ஆகிய துறைகளிலும் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.
நிர்வாகம் : தெற்கு ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
பணி விவரம்
Trade Apprentice
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.11.2022 (இன்று கடைசி)
பணியிடங்கள் எண்ணிக்கை: 1,343
கல்வி தகுதி
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, 10 + 2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்
· வெல்டர் - ஓராண்டு மூன்று மாதங்கள்
· ஃபிட்டர் மற்றும் பெயிண்ட்டர் - இரண்டு ஆண்டுகள்
· ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் - ஓராண்டு மூன்று மாதங்கள்வயது
வரம்பு
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, 15 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்கள் 15 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித் தொகை
பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6,000ம், ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000ம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
Ø தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
Ø SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.11.2022. அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Ø பணி சார்ந்த அலுவலக தொடர்பு ரயில்வே துறையின் 'National Informatics Centre' - "NICSMS"- இன் மெசேஜ் மூலமாகவும், "[email protected]" என்ற இ-மெயில் முகவரி வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்படும்.
Ø விண்ணப்பதாரர்கள் வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Ø விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண், இ-மெயில் ஆகிய விவரங்களை விண்ணப்பபடிவத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
Ø பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Ø பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். இளங்கலை பட்டம் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட லிங்கை, ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!


Click it and Unblock the Notifications












