தெற்கு மத்திய ரயில்வேயில் வேலை- விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை

தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தெற்கு மத்திய ரயில்வேயில் வேலை- விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை

நிர்வாகம் : தெற்கு மத்திய ரயில்வே

பணி : விளையாட்டு வீரர்களுக்கானது (Groups-C)

காலிப் பணியிடங்கள் : 21

வயது வரம்பு : 01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

10-ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாவட்ட, பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்

தேர்வு முறை : கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், விளையாட்டு தகுதி, விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.250. இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் Secunderabad-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கோடிட்ட Bank Draft, IPO ஆக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.scr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Senior Personnel Officer (Engg. & Rectt), Room No.412, Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Rail Nilayam, Secunderabad - 500 025 (Telangana).

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.08.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.scr.indianrailways.gov.in/cris/uploads/files/1564490633289-sports_quotq.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South Central Railway Jobs 2019: 21 Sports person Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+