ஐடிஐ முடித்தவர்களுக்கு திருவனந்தபுரத்தில் வேலை!

Posted By: Kani

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்டீல் அண்டு இண்டஸ்ட்ரியல் போர்ஜிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஸ்கில்டு ஒர்க்கர் டிரெய்னி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 39 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப் பணியிட விபரம்: 39


துறைவாரியான விவரம்
:

பிட்டர்- 10
போர்ஜர் அண்ட் ஹீட் டிரீட்டர்-10
மெஷினிஸ்ட்-4
வெல்டர்-3
டிராப்ட்ஸ்மேன்-1
அன்ஸ்கில்டு ஒர்க்கர்-11

வயது வரம்பு: ஜன., 1, 2017 அடிப்படையில் 41 வயதுக்குள்

கல்வித் தகுதி: ஸ்கில்டு பிரிவுகளுக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு.

அன்ஸ்கில்டு பதவிக்கு 7ஆம் வகுப்பில் தேர்ச்சியுடன் மலையாள மொழியறிவு தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500

PO Box No.436, Thycaud PO,
Thiruvananthapuram - 695 014

விண்ணப்பிக் கடைசி நாள்: மார்ச் 31, 2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்

2. அறிவிப்பு லிங்க்:

'கேரியர்' கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

என்எல்சியில் வேலை வேண்டுமா? இன்டெஷ்ட்ரியல் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு

English summary
SIFL invites applications for skilled worker trainees: Apply Before Mar 31!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia