பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையத்தில் (செபி) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 140-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குப் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையம் (செபி)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 147
பணி : உதவி மேலாளர்
கல்வித் தகுதி : சிபி ஆணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உதவி மேலாளர் பணியிடத்திற்கு சிஏ,, சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், சட்டம், எம்சிஏ., சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் துறை சார்ந்த பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 29.02.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sebi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும்.
- இதர பிரிவு விண்ணப்பதாரர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=147 என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












