கொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் முடிவை தள்ளி வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் முடிவை தள்ளி வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு!

குறிப்பாக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள பள்ளிகளை மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த முழு தகவலைக் காணலாம் வாங்க.

ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள்

ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள்

கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நிலையில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வழியில் வகுப்பு

ஆன்லைன் வழியில் வகுப்பு

கல்வி ஆண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான சூழல் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று தற்போது ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற சூழலே உள்ளது.

ஜனவரிக்குப் பின் பள்ளி திறப்பு?

ஜனவரிக்குப் பின் பள்ளி திறப்பு?

இந்நிலையில், தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு

மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு

இதனிடையே, பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க மத்திய அரசின் சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் திறக்கப்படும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு கொரோனா

மாணவர்களுக்கு கொரோனா

மும்பை அரசின் சார்பில் பள்ளிகளைத் திறக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகளைத் திறக்கும் முடிவை மும்பை மாநகராட்சி மாற்றி அறிவித்துள்ளது.

9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு

9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு

மும்பையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை தள்ளிப்போடப்படுகிறது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து இருப்பதாக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
School Reopening : Mumbai Schools Won't Open till dec 31
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+