பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) தற்போது சர்க்கிள் பேஸ்டு ஆபீஸர்ஸ் (Circle Based Officers -SBI CBO) பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயதுத்தகுதி, கல்வித் தகுதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறிய முடியும்.
எஸ்பிஐ வங்கி என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி(SBI) நாட்டில் உள்ள மிகப் பெரும் அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய இந்திய அரசு வங்கி என்றும் அழைப்பர். இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

இந்த வங்கி இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமைவாய்ந்த வங்கியாக அமைந்துள்ளது. 1806-ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது பாரத ரிசர்வ் வங்கி 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. 2008-ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.
ஸ்டேட் வங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரந்துள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச் சேவைகளையும் அளித்து வருகிறது. 16,000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். $250 பில்லியன் பெறுமான சொத்துக்களும் $195 பில்லியன் பெறுமான வைப்புகளும் கொண்டு பெரும் வங்கியாக உள்ளது. நாட்டில் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன்களில் 20% இந்த வங்கியின் உடையதாகும்.
மிகப்பழமையான வங்கியாகவும் மிகப்பெரிய வங்கியாகவும் இருந்தபோதும் தனது செயல்பாடுகளை கணிணிமயம் ஆக்குவதிலும் புதிய சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
உலக அளவில் இது 29-ஆம் இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் தரவரிசை அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இது ஒன்றே அரசு வங்கி. மற்றவை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி முதலியன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெருமைமிகு எஸ்பிஐ வங்கியில்தான் தற்போது சர்க்கிள் பேஸ்ட் ஆபீஸர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,280 ஆகும்.
அகமதாபாத் வட்டத்தில் 430, அமராவதி வட்டத்தில் 400, பெங்களூரு வட்டத்தில் 380, போபால் வட்டத்தில் 450,
புவனேஸ்வர் வட்டத்தில் 250, சண்டிகர் வட்டத்தில் 300, வட்டத்தில் சென்னை வட்டத்தில் 125, வடகிழக்கு வட்டத்தில் 250, ஹைதராபாத் வட்டத்தில் 425, ஜெய்ப்பூர் வட்டத்தில் 500, லக்னோ வட்டத்தில் 600, கொல்கத்தா வட்டத்தில் 230, மகாராஷ்டிரா வட்டத்தில் 300, மும்பை மெட்ரோ வட்டத்தில் 90, புது டெல்லி வட்டத்தில் 300,
திருவனந்தபுரம் வட்டத்தில் 250 பணியிடங்கள் என என மொத்தம் 5280 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சியை கல்வித்தகுதியாக பெற்றிருக்க வேண்டும்.
31.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். நவம்பர் 1, 1993 முதல் அக்டோபர் 31, 2002 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி (SC, ST & PwD ) பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.750/-ஐ கட்டணமாகச் செலுத்தவேண்டும்
தேர்வு செயல்முறை மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். அதாவது ஆன்-லைன் டெஸ்ட், ஸ்கிரீனிங், நேர்முகத் தேர்வு (online test (objective and descriptive), screening and interview) என 3 விதமான தேர்வுகள் இருக்கும்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 22.11.2023 முதல் 12.12.2023 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
பணியிட விளம்பரம் தொடர்பான அறிவிப்பை
https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 என்ற இணையதள லிங்க் மூலம் காணலாம்.
வயதுத்தகுதி, கல்வித் தகுதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறிய முடியும்.


Click it and Unblock the Notifications












