SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வரும் State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வரும் State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா?

மொத்தம் 29 பணியிடங்களை நிரப்பிடுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இங்கே காணலாம் வாங்க.

SBI Clerk Recruitment 2020

SBI Clerk Recruitment 2020

எஸ்பிஐ வங்கியின் சார்பில் தற்போது ஆர்மர் கிளார்க், சிறப்பு அதிகாரி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிட விபரங்கள்

காலிப்பணியிட விபரங்கள்

SBI Clerk Recruitment வெளியிட்டுள்ள ஆர்மர் கிளார்க் பணியானது முன்னாள் ராணுவத்தினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் மொத்தம் 29 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில், தமிழகத்தில் சென்னை வட்டத்தில் 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. இது ஆர்மர் கிளார்க் பணி என்பதால், அதற்கு ஏற்றவாறு உடற்திறன், உடற்தகுதி பெற்றிருப்பது கட்டாயம்.

கல்வித் தகுதி:-

கல்வித் தகுதி:-

மேற்கண்ட SBI Clerk பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், Armourer Grade 1 சர்வீஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும், EME Armament Course முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

வயது வரம்பு:-

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 30.9.2019 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

SBI Armourer Clerical ஊதியம்:

SBI Armourer Clerical ஊதியம்:

SBI Armourer Clerical Recruitment 2020 பணிக்கு மாதம் ரூ.11,765 முதல் ரூ.31,540 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இதர படிகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் சேர்த்து மாதம் 23,500 ரூபாய் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறை:

தேர்வு முறை:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் கணினி வழித்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித்தேர்வு மொத்தம் 1 மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆன்லைனில் உள்ளது.

SBI Clerk Recruitment முக்கிய நாட்கள்:-

SBI Clerk Recruitment முக்கிய நாட்கள்:-

  • SBI Clerk விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 23 ஜனவரி 2020
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12 பிப்ரவரி 2020
  • ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 8 மார்ச் 2020
  • தேர்வு நுழைவுச் சீட்டு வெளியாகும் நாள் : 21 பிப்ரவரி 2020
  • SBI Clerk Recruitment மேலும் விபரங்கள்

    SBI Clerk Recruitment மேலும் விபரங்கள்

    SBI Clerk பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sbi.co.in/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த முழு விபரங்களை நேரடியாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI SO 2020 Armourers in Clerical Cadre Recruitment: Apply Online for 29 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X