விண்ணப்பித்துவிட்டீர்களா? ஸ்டேட் வங்கியில் 2000 அதிகாரி பணியிடங்கள் காலி!

Posted By: Kani

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 ப்ரொபேஷ்னரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 13 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2000

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ப்ரொபேஷ்னரி அதிகாரி-2000

வயதுவரம்பு: 01.4.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.600, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசமாக மே 01,07,08 ஆகிய தேதிகளில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
SBI recruitment of probationary officers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia