பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.) காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 76 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.76 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
மொத்த காலிப் பணியிடங்கள் : 76
பணி : இணை பொது மேலாளர் (மூலதன திட்டமிடல்) - 01
ஊதியம் : மாதம் ரூ.68,680 முதல் ரூ.76,520 வரையில்
பணி : எஸ்எம்இ கடன் ஆய்வாளர் (துறை நிபுணர்) - 11
பணி : எஸ்எம்இ கடன் ஆய்வாளர் (Structuring) - 04
பணி : எஸ்எம்இ கடன் ஆய்வாளர் (கடன்) - 10
பணி : கடன் ஆய்வாளர் (எம்எம்ஜிஎஸ் -III) - 30
ஊதியம் : மாதம் ரூ. 42,020 முதல் ரூ.51,490 வரையில்
பணி : கடன் ஆய்வாளர் (எம்எம்ஜிஎஸ்-II) - 20
ஊதியம் : மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில்
கல்வித் தகுதி : சி.ஏ., எம்பிஏ (நிதி), முதுநிலை டிப்ளமோ மேனேஜ்மென்ட் படித்தவர்கள், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் படிப்புடன் எம்பிஏ (நிதி) அல்லது சிஏ, சிஎஃப்ஏ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு 3 -ஆம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.08.2019


Click it and Unblock the Notifications












