நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் தற்போது ஜனவரி 2 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.
அதில், பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக (SBI) உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஜூனியர் அசோசியட்ஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலைக்காகக் காத்திருப்பவர்கள் இவ்வாப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எஸ்பிஐ வங்கி வேலை வாய்ப்பு
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஜூனியர் அசோசியட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட முழு விபரங்களை இங்கே காணலாம்.

காலிப் பணியிட விபரங்கள்:-
எஸ்பிஐ வங்கி பணியிடத்திற்கு நாடு முழுவதும் இருந்து மாநிலம்வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 393 காலிப் பணியிடங்களும், புதுச்சேரியில் 7 காலிப் பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் 8000 அதிகமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி:-
SBI Clerk Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. இரண்டு டிகிரி படித்தவராக இருந்தால் 01.01.2020 தேதிக்குள் தேர்ச்சிப் பெற்று, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதியாண்டு செமஸ்டர் படித்துவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களும் ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-
01.01.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

வயது வரம்பு தளர்வு
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஓபிசி - 13, எஸ்.சி, எஸ்.டி - 15, பொதுப் பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள் என தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 7 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

ஊதியம்:-
SBI Clerk Recruitment 2020 ஜூனியர் அசோசியட் பணியிடத்திற்கு மாதம் ரூ. 11,765 முதல் ரூ.31,450 வரையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இவற்றில் கூடுதல் படியும் வழங்கப்படும். பணி அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ப, 1 லட்சம் ரூபாய் வரையில் ஊதியம் மாற்றியமைக்கப்படும்.

தேர்வு முறை:
விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவர். இவற்றில், எழுத்துத் தேர்வானது முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதிலும் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், பயிற்சிக்குப் பின் பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் அமர்த்தப்படுவர்.

தேர்வு பாடத் திட்டம்:
SBI Clerk Recruitment 2020 முதனிலைத் தேர்வானது கணினி வழியாக நடைபெறும். இதில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்விற்கான கேள்விகள் ஆங்கிலம், கணித அறிவு, திறனறிவு ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும். அதனைத் தொடர்ந்து மெயின் தேர்வின் போது 200 மதிப்பெண்களுக்கு 2.40 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். இதில் பொது அறிவு, பொது ஆங்கிலம், கணிதம், திறனறிவு மற்றும் கணினி அறிவு ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்:
SBI Clerk Recruitment 2020 ஜூனியர் அசோசியட் தேர்விற்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இவற்றில், எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

SBI Clerk Recruitment 2020 முக்கிய தேதிகள்:-
- அறிவிப்பு வெளியான நாள் : 02 ஜனவரி 2020
- விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 03 ஜனவரி 2020
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26 ஜனவரி 2020
- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 26 ஜனவரி 2020
- முதனிலைத் தேர்வு நடைபெறும் நாள் : பிப்ரவரி / மார்ச் 2020
- மெயின் தேர்வு நடைபெறும் நாள் : 19 ஏப்ரல் 2020