டாக்டருக்கு படித்திருக்கிறீர்களா.... அப்படின்னா...எஸ்பிஐ-யில் வேலை கன்ஃபார்ம்...!!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கியில் (State Bank of India -SBI Bank) தற்போது டாக்டர் (Doctor) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://drive.google.com/file/d/1ix0cwPkjVux-6KGHfpr6zImlA1IGsRd1/view என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

எஸ்பிஐ வங்கி என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி(SBI) நாட்டில் உள்ள மிகப் பெரும் அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய இந்திய அரசு வங்கி என்றும் அழைப்பர். இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது.

இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன.

டாக்டருக்கு படித்திருக்கிறீர்களா.... அப்படின்னா...எஸ்பிஐ-யில் வேலை கன்ஃபார்ம்...!!!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

இந்த வங்கி இந்தியத் துணைக் கண்டத்திலேயே பழமைவாய்ந்த வங்கியாக அமைந்துள்ளது. 1806-ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கிய போது பாரத ரிசர்வ் வங்கி 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது.

2008-ம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.

ஸ்டேட் வங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரந்துள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச் சேவைகளையும் அளித்து வருகிறது. 16,000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். $250 பில்லியன் பெறுமான சொத்துக்களும் $195 பில்லியன் பெறுமான வைப்புகளும் கொண்டு பெரும் வங்கியாக உள்ளது. நாட்டில் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன்களில் 20% இந்த வங்கியின் உடையதாகும்.

மிகப்பழமையான வங்கியாகவும் மிகப்பெரிய வங்கியாகவும் இருந்தபோதும் தனது செயல்பாடுகளை கணிணிமயம் ஆக்குவதிலும் புதிய சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
உலக அளவில் இது 29-ஆம் இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் தரவரிசை அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இது ஒன்றே அரசு வங்கி. மற்றவை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி முதலியன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமைவாய்ந்த எஸ்பிஐ வங்கியில்தான் தற்போது டாக்டர் (Doctor) பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படும் தமிழகத்தின் ஈரோட்டில் பணியமர்த்தப்படுவர்.

எஸ்பிஐ வங்கியில் டாக்டர் (Doctor) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

எஸ்பிஐ வங்கியில் டாக்டர் (Doctor) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், எம்டி (MBBS, MD) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க இயலும்.

எஸ்பிஐ வங்கியில் டாக்டர் (Doctor) பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

எஸ்பிஐ வங்கியில் டாக்டர் (Doctor) பணியிடங்களுக்கான மாத சம்பளம்:

இந்த எஸ்பிஐ(SBI) வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவர்.

எஸ்பிஐ வங்கியில் டாக்டர் (Doctor) பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் விதம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எஸ்பிஐ வங்கியில் டாக்டர் (Doctor) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அதாவது வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் (10.01.2024) அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு

https://drive.google.com/file/d/1ix0cwPkjVux-6KGHfpr6zImlA1IGsRd1/view என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI-State Bank of India, Erode has decided to hire Various Doctors posts in Erode. The Offline application started from 18-12-2023 to 10-01-2024. The official notification and application details will be available at https://sbi.co.in/. The SBI Erode will conduct the selection process on a Written Exam/Interview basis. Candidates should check the details about qualification, age limit requirements, selection, and salary details in the post below.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+