மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் பணிகளுக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

SAMEER வேலை வாய்ப்பு 2020
SAMEER என்பது மத்திய தகவல்தொழில்நுட்ப துறையாகும். இத்துறையின் சென்னை தரமணியில், மின்காந்தவியல் மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரிசர்ச் சைன்டிஸ்ட், புராஜெக்ட் அசோசியட்
ரிசர்ச் சைன்டிஸ்ட், புராஜெக்ட் அசோசியட் பணிகளுக்கு மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 55 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இசிஇ, இடிஇ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை
ரிசர்ச் சைன்டிஸ்ட், புராஜெக்ட் அசோசியட் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரரின் தகுதி, பணி அனுபவத்துக்கு ஏற்றவாறு மாதம் ரூ.30,000 முதல் ரூ.42,800 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

புராஜெக்ட் அசிஸ்டெண்ட் - ஏ
புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணிக்கு மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இசிஇ, இடிஇ துறையில் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,000 முதல் ரூ.22,400 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

புராஜெக்ட் அசிஸ்டெண்ட் 'பி'
புராஜெக்ட் அசிஸ்டெண்ட் 'பி' துறையில் ஒரு காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு இசிஇ, இடிஇ டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் துறை ரீதியான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு மற்றும் ஊதியம்
புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பி பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர். இதற்கு ரூ.21,500 முதல் ரூ.28,100 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

புராஜெக்ட் அசிஸ்டெண்ட் 'சி'
புராஜெக்ட் அசிஸ்டெண்ட் சி துறையில் ஒரு காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு இசிஇ, இடிஇ துறையில் டிப்ளமோ முடித்து, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு பணி அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் மாதம் ரூ.27,000 முதல் ரூ.34,800 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

SAMEER Recruitment 2020 நேர்காணல் நடைபெறும் இடம்:
Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER). CIT Campus, 2nd cross Road, Taramani, Chennai-600 113
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cem.sameer.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது https://cem.sameer.gov.in/files/notification-02-20.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.