டிப்ளமோ முடித்தவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள இரும்பு ஆலை யான செயில் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
sail.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
செய்ல் (SAIL) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். ரூ. 48,681 கோடி ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மத்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் செயில் உள்ளது. பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ, பர்ன்பூர் ஆகிய 5 நகரங்களில் செயில் உருக்காலை பிரமாண்டமாக அமைந்துள்ளது.
மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது.

செயில் நிறுவனத்திடம் உள்ள பெரிய ஆலைகளில் முக்கியமானது ரூர்கேலா இரும்பு உருக்காலை ஆகும். ரூர்கேலா இரும்பு உருக்காலை (RSP), ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் அமைந்துள்ளது.இது 1959-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மேற்கு ஜெர்மன் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் பழங்குடியின மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 19,000 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டது.
இந்த பெருமைவாய்ந்த செயில் இரும்பாலை நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியானதாக அறிவிப்பு வந்துள்ளது.
இந்த செயில் இரும்பாலையில் தற்போது ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் 3, அட்டென்டன்ட்கம் டெக்னீசியன் பிரிவில் பாய்லர் அட்டென்டன்ட் 3, எலக்ட்ரீசியன் 12, பிட்டர் 6, டர்னர் 3, வெல்டர் 5, கிரேன் ஆப்பரேட்டர் 9, கனரக வாகன டிரைவர் 5 என மொத்தம் 46 இடங்கள் காலியாக உள்ளன உள்ளன.
செயில் இரும்பாலை பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: செயில் இரும்பாலையில் ஆப்பரேட்டர் பணிக்கு டிப்ளமோ, அட்டென்டன்ட் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
செயில் இரும்பாலை பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 18.1.2024 அடிப்படையில் ஆப்பரேட்டர் 30, மற்ற பணிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
செயில் இரும்பாலை பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
செயில் இரும்பாலை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
செயில் இரும்பாலை பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணமாக ஆப்பரேட்டர் பணிக்கு ரூ. 500 (எஸ்.சி., / எஸ்டி., 150), மற்ற பணிக்கு ரூ 300 (எஸ்.சி., / எஸ்.டி., ரூ. 100) செலுத்தவேண்டும்.
விண்ணப்பம் அனுப்பம் கடைசிநாள்:
செயில் இரும்பாலை பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை 18.1.2024 தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு sail.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












