இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனம் என்று அழைக்கப்படும் செயில் (SAIL) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு sailcareers.com என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
செய்ல் (SAIL) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். ரூ. 48,681 கோடி ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மத்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் செயில் உள்ளது. பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ, பர்ன்பூர் ஆகிய 5 நகரங்களில் செயில் உருக்காலை பிரமாண்டமாக அமைந்துள்ளது. மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது.

செயில் நிறுவனத்திடம் உள்ள பெரிய ஆலைகளில் முக்கியமானது ரூர்கேலா இரும்பு உருக்காலை ஆகும்.
ரூர்கேலா இரும்பு உருக்காலை (RSP), ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் அமைந்துள்ளது.இது 1959-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மேற்கு ஜெர்மன் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் பழங்குடியின மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 19,000 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டது.
2010-12 விரிவாக்கத்துக்குப் பின்னர், RSP தற்போது 4.5 MTPA (ஆண்டுக்கு மில்லியன் டன்) ஹாட் மெட்டல், 4.2 MTPA கச்சா ஸ்டீல் மற்றும் 3.9 MTPA விற்பனையான ஸ்டீல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. 19,134 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த செயில் நிறுவனத்தில்தான் மேனேஜ்மென்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) பிரிவில் கெமிக்கல் 3 இடங்கள், சிவில் 3 இடங்கள், எலக்ட்ரிக்கல் 26 இடங்கள், இன்ஸ்ட்ருமென்டேசன் 7 இடங்கள், மெக்கானிக்கல் 34 இடங்கள், மெட்டலர்ஜி 5 இடங்கள், மைனிங் 14 இடங்கள் என மொத்தம் 92 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 31.12.2023 அடிப்படையில் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சென்னை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆன்லைன் முறையை மட்டுமே தேர்வு செய்யவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 750 செலுத்தப்படவேண்டும். மேலும் எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 செலுத்தினாலே போதுமானது.
கடைசி நாள்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 31-ம் தேதி (31.12.2023) கடைசி நாளாகும்.
இணையதள முகவரி:
விண்ணப்பதாரர்கள் தாங்கள் வேண்டும் கூடுதல் விவரங்களுக்கு sailcareers.com என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












