'மகாரத்னா' அந்தஸ்து பெற்ற நிறுவனம் என்ன என்பதை சரியாக கண்டுபிடிச்சிருந்தா? நீங்க ரொம்ப அறிவாளிங்கோ...! சரி வாங்க என்ன நிறுவனம், அங்கு என்ன வேலைன்னு பார்ப்போம்...!
'செயில்' என அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையத்தில், காலியாக உள்ள 27 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் வாயிலாக, தகுதியான செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நிர்வாகம்: இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of india limited)
மேலாண்மை: மத்திய அரசு
பணி விவரம்: செவிலியர் (Staff Nurse)
பணியிடங்கள் எண்ணிக்கை: 27
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
நேர்காணல் தேதி: 26.08.2022
பணியிடம் : மேற்கு வங்கம்
ஊதியம்: ரூ.15,020 (பயிற்சி காலத்தில்)
கல்வி தகுதி
மத்திய அல்லது மாநில அரசால்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தில் விண்ணப்பதாரர் இடைநிலை கல்வியுடன் (10, 12 Std) இந்திய நர்சிங் கவுன்சிலுடன் (INC) இணைந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/கல்லூரியில் பொது நர்சிங் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் (GNM) B.Sc (நர்சிங்) / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 1ம் தேதி நாளன்று 30 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
மற்ற பிரிவினருக்கு, அரசால் வழங்கப்பட்ட வயது வரம்பு தளர்வுகள் கிடைக்கப்பெறும். வயது வரம்பு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பாணை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
முக்கிய தகவலுங்கோ...!
தேர்வின்றி நியமனம் செய்யப்படும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உடனே ஆன்லை
னில் விண்ணப்பப் படிவத்தைப் பிழையின்றி பூர்த்தி செய்து, அதை நேர்காணல் நாளான ஆகஸ்ட் 16ல் உரிய ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் எடுத்து வர வேண்டும் என்பதை மறக்காதீங்க... மறக்காதீங்க...!
நேர்காணல் விவரங்கள்
இடம்
Confluence, Opp. to Burnpur Post Office, Near Bharti Bhawan, P.O. Burnpur-713325, DT: Paschim Bardhaman, West Bengal.
நேரம்: காலை 9:00 மணி ( ஞாபகம் வச்சுக்கோங்க...! விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள் எடுத்துட்டு போகனும்)
வயது வரம்பு, கல்வி தகுதி, ஊதியம் உள்ளிட்ட இதர விவரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் இணையதளத்தின் வாயிலாக முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய வேண்டும்?
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==