செயில் நிறுவனத்தில் செவிலியர் பணி!

Posted By: Kani

நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் பல்வேறு கிளைகளுடன் புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள உருக்காலையில் காலியாக உள்ள 130 பயிற்சி செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள செவிலியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: 130

பணியிடம்: மேற்கு வங்கம் (துர்காபூர்)

பணி: நர்ஸ் (Nurse)

வயதுவரம்பு: 22.04.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள்  

தகுதி: பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ பொது நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.8,000 ஆயிரம் 

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Director's Conference Hall,

DSP main Hospital,

Durgapur-713205.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'ஜாப் ஓபனிங்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு 20.04.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
SAIL invites application for the post of Nurses in Durgapur Steel Plant (DSP) Hospital

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia