சமீப காலமாக ரயில்வேத் துறையில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக தற்போது துணை மருத்துவம் படித்தவர்களுக்கான பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மொத்தம், 1937 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய ரயில்வேத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்தம் காலிப் பணியிடங்கள் : 1937
பணியிடம் : இந்தியா முழுவதும்
சென்னை ரயில்வே தேர்வு வாரியத்திற்கு 173 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குச் சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினருக்கு - ரூ.250
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டல இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.